rains at chennai

கடந்த மார்ச் முதல் வாரம் முதலே, வெயில் வாட்டி வதைத்தது. இதனால், மக்கள் வெளியில் தலை காட்ட முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அக்னி நட்சத்திரம் துவங்கிய பிறகு 100 ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது.

மேலும், கடந்த ஆண்டு மழை பொய்த்து போனதால், வறட்சி ஏற்பட்டு விவசாயம் முற்றிலும் பாதித்தது. ஒருபுறம் தண்ணீர் கிடைக்காமல் மக்கள், அலைந்து கொண்டிருக்க, மறுபுறம் வெயிலும் காய்ந்து, சுட்டெரித்தது.
கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே, அனல் தாக்கம் அதிகமாகவே இருந்தது. நகர் பகுதிகளில் பலர் மயங்கி விழுந்தனர். சென்னையில் மட்டும் 3 பேர் பலியானதாக தகவல்கள் வந்தன.

நேற்று முன்தினம் மாலை காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் திடீர் மழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. சிறிய குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கியது.

இதனால், விவசாயிகள் கோடை மழையை நம்பி, விவசாயத்துக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பல இடங்களில் பயிர் செய்ய தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை சுமார் 10 மணி முதல் சென்னை நகரின் பல பகுதியில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டு தாங்கள், அசோக் நகர், வடபழனி ஆகிய இடைகளில் மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

மேலும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர், ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர், மதுரவாயல், செங்குன்றம் உள்பட பல பகுதிகளில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க மழை வரவேண்டும் என நாம் எதிர் பார்த்தாலும், தற்போது சென்னை மக்களின் தாகத்தை தீர்க்க புறநகர் பகுதிகளி கட்டாயம் மழை பெய்தே ஆக வேண்டும் என்பது சென்னை மக்களின் எதிர் பார்ப்பாக இருக்கிறது. மேலும், சென்னையை வாட்டி வதைத்த கத்திரி வெய்யிலை விரட்டியடைத்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.