மேலும் 2 நாட்களுக்கு கனத்த மழை..! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..! 

வடமேற்கு வங்க கடல் பகுதியில் உள்ள காற்றழுத்த பகுதி வலுவடைந்து, அதே பகுதியில் நீடித்து வருவதால், அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, மலை சார்ந்த மாவடங்களான கோவை, நீலாங்கரை, தேனீ, திண்டுக்கல் உள்ளிட்ட  மாவட்டங்களில் மழையோ அல்லது கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான அல்லது ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

கடந்த 24 மணி நேரத்தில், வால்பாறையில் 18 செ.மீ, சின்ன கல்லாரில் 17 செ.மீ  மழையும் பதிவாகி உள்ளது.கடந்த பத்து நாட்களாக கேரளாவில் பெய்து வந்த தொடர் கனமழையால் அதிக வெள்ளப்பேருக்கு ஏற்பட்டு 35 பேருக்கும் மேல் பலியாகி உள்ளனர்.

பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். ஒரு சிலர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு தொடர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.