சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை .. வானிலை மையம் அறிவிப்பு

சென்னையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து  கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 

Rain in Chennai for the next 2 hours - RMC

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து  மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்றும் நாளையும் மழை தொடரும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க:உஷார் !! இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.. எங்கெல்லாம் மழை.. வானிலை அப்டேட்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios