Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu Rains : மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..!

தென் கடலோர மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.

rain in a few places in the southern coastal districts today
Author
Tamilnadu, First Published Jan 10, 2022, 1:38 PM IST

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தென் கடலோர மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். நாளை டெல்டா மாவட்டங்கள்,  தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

rain in a few places in the southern coastal districts today

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் . 12 மற்றும் 13 ஆம் தேதிகளில்  கடலோர மாவட்டங்கள் , அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவை,  காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

14ஆம் தேதி தென்மாவட்டங்கள் , கடலோர மாவட்டங்கள்,  அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31, குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

rain in a few places in the southern coastal districts today

இன்று மற்றும் நாளை தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக , இடி மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios