rain again in chennai

சென்னையில் பல இடங்களில் இன்று மீண்டும் மழை தொடங்கியுள்ள நிலையில். மழைக்கான முன்னோட்ட மேகக்கூட்டங்கள் வந்து கொண்டு இருப்பதாகவும், ஒன்று அல்லது இரு முறை சென்னையில் மழை பெய்யக்கூடும் என்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் மழை இருக்கலாம் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், தொலைவில் இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையின் அழுத்தத்தால், இரு மேகக்கூட்டங்கள், வடதமிழக கடற்கரைப்பகுதியை நோக்கி வருகிறது. இதை நாம் ராடாரின் “மேக்ஸ் இசட்” பகுதியில் பார்க்க முடியும். 

மழை மேகங்கள் சென்ைனக்கு அருகே இருப்பதால், நகரத்தைநோக்கி நகர்ந்துதான் மழை பொழியவேண்டும் என்கிற அவசியமில்லை. மழைத்துளி எப்படி நகர்கிறது, அதே நேரம் காற்றின் திசை எப்படி இருக்கிறது என்பதையும் படத்தில் பாருங்கள்.

வடக்கு , வடகிழக்கில் இருந்து தெற் தென்மேற்காகவும் காற்று வீசுகிறது. ஆதலால், மழைத்துளிகளின் நகர்தல் என்பது வடகில் இருந்து தெற்கு நோக்கியே இருக்கும். ஆதலால், முதலில் மழை கிழக்கு கடற்கரைச்சாலைப்பகுதியில் தொடங்குமே தவிர நகர்பகுதியில் அல்ல என தெரிவித்துள்ளார்..

காற்றழுத்த தாழ்வுநிலை இருக்கும் போது, மீண்டும், மீண்டும் தொடர்ச்சியாக மேகக்கூட்டங்களை உருவாக்கி அனுப்பிக்கொண்டே இருக்கும். இவை மழைக்கு முந்தைய பூர்வாங்க மேகக்கூட்டங்களாகும் என வெதர்மேன். தெரிவித்துள்ளார்.

மழை மேகங்கள் தொடர்ந்து மிரட்டினாலும், கடலூர், டெல்டா முதல் ராமநாதபுரம் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு நல்ல மழை இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்து வருகிறது. சென்னை அடையாறு, தரமணி, திருவான்மியூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.