தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து அறிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை விரைகிறார். திமுக தலைவர் கருணாநிதிக்கு 4-வது நாளாக காவேரி மருத்துவனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீரான நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மருத்துவமனைக்கு முன் திமுக தொண்டர்கள் மீண்டும் குவிந்து வருகின்றனர். மருத்துவமனையில் மீண்டும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசியல் தலைவர்கள் வரிசையாக மீண்டும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மருத்துவமனைக்கு வந்த திமுக செயல் ஸ்டாலின் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்தித்தார். 

கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகிறார். மாலை 4 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.