டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று கூறி வருகிறோமே தவிர, டெங்கு காய்ச்சல் இல்லை என கூறவில்லை என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து, தமிழ்நாடு சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு உள்ளது என்றார். காய்ச்ச்ல வந்த உடனேயே பொதுமக்கள் மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கு தானாக மருந்து உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். டெங்கு காய்ச்சல் குறித்து தேவையற்ற பீதி வேண்டாம். எல்லா காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் என பொதுமக்கள் பயப்பட வேண்டாம்.

டெங்கு காய்ச்சல் அறிகுறி முதலிலேயே கண்டறியப்பட்டால், உரிய சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்தலாம். மழையின்போது, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளில் நீர் தேங்கி டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசு உருவாகிறது. எனவே, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை பொதுமக்கள் அகற்ற வேண்டும்.

டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு கூறினார்.