rabbits cooked and rabbit hunt. 20 thousand fine Forest department Action ...
தருமபுரி
தருமபுரியில் முயல் வேட்டையாடி காட்டுக்குள்ளேயே சமைத்து சாப்பிட்ட இருவருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் அதிரடி காட்டினர்.
தருமபுரி மாவட்டம், தீர்த்தமலை அருகே அடிக்கடி முயல் வேட்டையாடப்படுவதாக தீர்த்தமலை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்பேரில், தீர்த்தமலை வனச் சரகர் எஸ். தண்டபாணி தலைமையிலான வனத்துறையினர் தாம்பல் பகுதியில் நேற்று சுற்றுப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, வனப்பகுதியில் இருவர் முயல்களை வேட்டையாடி சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை வனத்துறையினர் கண்டனர்.
வனத்துறையினரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். அவர்களை விரட்டிப் பிடித்த வனத்துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த இருவரும் நீப்பத்துறை கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் கண்ணன் (47), அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் (70) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்திற்காக இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் விதித்து மாவட்ட வன அலுவலர் (அரூர்) எஸ். செண்பகப்பிரியா உத்தரவிட்டார்.
