Purushothaman arrested for cheating 8 women The daughter was also arrested

இரண்டாவது திருமணம் என்று கூறி பல பெண்களை ஏமாற்றி, கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய கல்யாண மன்னன் புருஷோத்தமன் மற்றும் அவருக்கு உடைந்தையாக இருந்த மகள் கீதாஞ்சலியையும் நேற்று இரவு கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் வெள்ளலூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். முதல் மனைவியை இழந்த இவருக்கு 57 வயது ஆகிறது. புருஷோத்தமனுக்கு 20 வயதில் கீதாஞ்சலி என்ற மகள் இருக்கிறார். 

புருஷோத்தமன் தன்னை தொழிலதிபர் என்று சொல்லிக் கொண்டு, இரண்டாவது திருமணம் என்கிற பெயரில் பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் கோடிக்கணக்கி பணத்தைச் சுருட்டி உள்ளார்.

இந்த தகவல் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் குமுதவள்ளி மூலமாக புருஷோத்தமன் லீலைகள் அம்பலமாகியுள்ளது. இதற்கு திருமண தகவல் மையத்தை சேர்ந்த இரண்டு பேர் உடந்தையாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணவரை இழந்த குமுதவள்ளி, காந்திபுரத்தில் உள்ள மெட்டி ஒலி திருமண தகவல் மையம் மூலமாக புஷோத்தமனைச் சந்தித்தார். குமுதவள்ளி உட்பட 8 பெண்கள், புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த புருஷோத்தமன் கடந்த 28.1.2018 அன்று கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. 

ஆனால், இதனை போலீசார் மறுத்தனர். இந்த நிலையில் புருஷோத்தமன் மற்றும் அவருடைய மகள் கீதாஞ்சலியையும் நேற்று இரவு கைது செய்து, கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.