Asianet News TamilAsianet News Tamil

நாமக்கல்லில் புதிய வரலாற்று உச்சம் படைத்த முட்டை விலை

நாமக்கல் மண்டலத்தில் தற்போது வரை இல்லாத அளவாக கோழி முட்டைகளின் விலை 555 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

purchase rate is new hike for eggs in namakkal
Author
First Published Jan 2, 2023, 11:00 AM IST

தமிழகத்தில் நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்காக வாரம் 3 கோடி முட்டைகள் அனுப்பப்படுகின்றன. கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் நாமக்கல்லில் இருந்து முட்டைகள் அனுப்பப்படுகின்றன. குறிப்பாக அண்மையில் கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு கத்தார் நாட்டிற்கு நமக்கல்லில் இருந்து முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டன.

Vaikuntha Ekadashi 2023: ஸ்ரீரங்கம், திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்கள் பரவசம்

கோழிப் பண்ணைகளில் உற்பத்தியாகும் 52 கிராம் எடை கொண்ட பெரிய முட்டைக்கு, என்இசிசி வாரம் 3 முறை விலை நிர்ணயம் செய்கிறது. கடந்த ஒருவார காலமாக முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 550 காசாக இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று என்இசிசி மண்டல சேர்மன் டாக்டர் செல்வராஜ் 5 காசுகள் உயர்த்தி ஒரு முட்டையின் விலை 555 காசாக நிர்ணயம் செய்தார்.

கடந்த 40 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் ஒரு முட்டையின் விலை 555 காசு என்ற நிலைக்கு செல்வது இது தான் முதல் முறை. இதற்கு முன்னர் ஒரு முட்டையின் விலை 550 காசு என்று இரண்டு முறை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், வடமாநிலங்களில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால் முட்டையின் தேவையும் அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பால் அனைத்து மண்டலங்களிலும் முட்டைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பாமக நிர்வாகிகள் இரண்டு பேர் ஓட ஓட விரட்டி படுகொலை.. போலீஸ் குவிப்பு..!

அதன் அடிப்படையில் தான் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டையின் அளவும் அதிகரித்துள்ளதால், வரும் காலங்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios