தமிழக அரசியலில் பரபரப்பு காட்சியாக அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகளில் தொடர்ச்சியாக சுவாரஷ்யமான நிகழ்சிகளும் அரங்கேறி வருகிறது.

கமிஷ்னர் அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு காணவில்லை என்று அவரது தொகுதி வாக்காளர் ருசிகர புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தமிழக அரசியலில் அதிரடி மாற்றமாக முதலமைச்சர் பதவியிலிருந்து ஓ.பி.எஸ் அகற்றப்பட்டு சசிகலாவை அறிவித்த நிலைப்பாடு பரபரப்பாக பேசப்பட்டது.

சசிகலாவை முதல்வராக ஏற்க தொண்டர்கள், பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையல், ஓ.பி.எஸ் கடந்த 7 ஆம் தேதி சசிகலாவுக்கு எதிராக பேசி பரபரப்பு ஏற்படுத்தினார்.

இதையடுத்து பரபரப்பான நிகழ்வுகள் அதிமுகவிற்குள் அடுத்தடுத்து நடந்தது.

தங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் தங்களுக்குதான் ஆதரவு என்று இருபுறமும் கூறிவந்தநிலையில், திடீரென ஓ.பி.எஸ்க்கு 6 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர்.

இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏக்கள் குறித்து விமர்சனம் எழுந்தது.

அதிமுக தொண்டர்கள் பொதுமக்களின் எண்ணத்திற்கு மாறாக சசிகலாவை ஆதரித்ததாக புகார் எழுந்தது.

எம்.எல் ஏக்களின் செல்போன் எண்களை “வாட்சப்” வலைதளங்களில் போட்டு அவர்களிடம் போன் செய்து கேளுங்கள் என்று தகவல் பரபரப்பட்டது.

இதையடுத்து தொகுதியிலிருந்து வாக்காளர்கள் அமைச்சர் சரோஜா, எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியம் உள்ளிட்டவர்களிடம் பேசியதாக “வாய்ஸ் மெசேஜ்” வெளியானது.

சில எம்.எல்.ஏக்கள் காணவில்லை என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு தொகுதியை சேர்ந்த வாக்காளர் செந்தில் முருகன் என்பவர் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் எனது சொந்த ஊர் கொடிமங்கலம் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் அடங்கியுள்ளது.

எனது கிராமத்தில் அடிப்படை வசதி சரியாக இல்லாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மர்ம காய்ச்சல் பரவி வருவதால் எங்கள் தொகுதி எம்,.எல்.ஏவை நேரில் சந்தித்து மனு கொடுக்க அரசு சட்டமன்ற விடுத்திக்கு சென்றேன்.

அங்கு அமைச்சரை காணவில்லை

அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா எங்கள் தொகுதி எம்.எல்.ஏவை சட்டத்துக்கு விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆகவே காவல்துறை ஆணையர் அலுவலர்கள் அவரை மீட்டுத்தருமாறு கேட்டு கொள்கிறேன்.

அவரை திங்கள் கிழமை காலை 8 மணிக்குள் மீட்டு தரவில்லை எனில் காவல் துறையை கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தபடும் என்று இடத்தை குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார்.

அமைச்சர் காணமால் போனதாக தொண்டர் அளித்த விசித்திர புகார் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதேபோல் அமைச்சர் கடம்பூர் ராஜை அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த 7 ஆம் தேதி கடத்தி சென்றுள்ளதாகவும், அவரை எங்கே பார்த்தாலும் எங்களுக்கு தெரிய படுத்தவும். இப்படிக்கு ஊர்மக்கள், கோவில்பட்டி தொகுதி என்று புகைப்படத்துடன் கூடிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் வலைதளங்களில் வலம் வருகின்றன.

இதேபோல், ஆம்பூர் தொகுதி எம்.எல்..ஏ பாலசுப்பிரமணியம் காணமல் போனதாகவும் வலைதளங்களில் மீம்ஸ்கள் பரவி வருகிறது.