public protest in theni dindigul road
ஓபிஎஸ்க்கு எதிர்ப்புத் தெரிவித்து 1000க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் !! தேனி அருகே பரபரப்பு !!!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மிக அதிக ஆழத்தில் ஓபிஎஸ் கிணறு வெட்டுவதால் குடிநீர் தட்டுப்பாடு எற்படுவதாக கூறி ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தேனி – திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளத்தை அடுத்த லட்சுமிபுரத்தில் ஓபிஎஸ் 200 அடி ஆழத்திற்கு மேலாக 4 கிணறுகளை வெட்டி விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் 200 அடி ஆழத்துக்கு மற்றுமொரு கிணறு வெட்ட ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே ஓபிஎஸ் வெட்டியுள்ள 4 கிணறுகள் மூலம் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லட்சுமிபுரம் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் புதிய கிணறு வெட்ட முற்பட்டால் முற்றிலுமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அதனால் அந்த கிணறு வெட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் லட்சுமிபுரம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இல்லை என்றால் ஒரு கிணற்றை மட்டும் குடிநீருக்காக ஓபிஎஸ் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியிறுத்தினர். இதற்கு ஓபிஎஸ் தரப்பு ஒத்துக்கொள்ளாததால் தேனி-திண்டுக்கல் சாலையில் லட்சுமிபுரம் கிராமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இப்பிரச்சனை குறித்து ஓபிஎஸ்சிடம் பேசி முடிவுக்கு வரலாம் என்றும் அதுவரை மறியல் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர் இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
