Psycho to marry sister to take revenge on sister

அக்கா தன்னை பிடிக்கவில்லை என்றதால் தங்கையை காதலித்து திருமணம் செய்து தும்புருத்தும் சைக்கோ வாலிபர்.

பெங்களூரு பீன்யாவை சேர்ந்த சந்திரசேகர் மனைவி பிந்து இருவரும் உறவினர்கள். இவர்களுக்கு 8 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் முடிந்தது. ஆரம்பத்தில் மனைவியை சந்தோஷமாக காதலித்த வந்த, சந்திரசேகர், கடந்த சில மாதங்களாக அவரை அதிகளவு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மனைவியுடன் தகராறு செய்த சந்திரசேகர் அவரது கையை முறித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிந்துவின் பெற்றோர் உதவியுடன் பெங்களூரு பவுரிங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து பீன்யா போலீசில் பிந்துவின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற போலீசார் பிந்துவிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிந்துவின் அக்காவை சந்திரசேகர் பிந்துவின் சகோதரியை பெண் கேட்டு வந்தாராம். அப்போது அவரது சகோதரி, எனக்கு சந்திரசேகரை பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனாலும் விடாமல் தொடர்ந்து அவரை திருமணத்திற்கு வற்புறுத்தி வந்தாராம். அந்த பெண் பிடி கொடுக்காததால். பிந்துவின் சகோதரியை பழி வாங்க சந்திரசேகர் திட்டமிட்டு 2 ஆண்டாக பிந்துவை பின்தொடர்ந்து காதலித்து, அவரது மனதில் இடம் பிடித்துவிட்டார். 8 மாதங்களுக்கு முன்பு காதல் விவகாரத்தை இரண்டு பேரின் வீட்டிலும் எடுத்து கூறினார். பெற்றோரும் சம்மதித்து இரு வீட்டார் முன்னிலையில் சந்திரசேகர், பிந்துவை திருமணம் செய்து கொண்டார்.

அதற்கு பின்னர்தான் சந்திரசேகர் சுயரூபம் தெரிவந்துள்ளது, அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது அக்காள் வேண்டாம் என்று சொன்னதால் மீது உள்ள கோபத்தில் தன்னை பழி வாங்குவதற்காக திருமணம் செய்து கொண்டார் என்ற திடுக்கிடும் விஷயம் தெரிந்ததால். அவரது கொடுமைகளை தாங்கிக் கொண்ட பிந்துவை சந்திரசேகர் அவரை அதிகளவு பேச விடவில்லை. மாறாக சிகரெட்டால் சூடு வைப்பது, அடித்து உதைப்பது என்று கொடுமை செய்து வந்தாராம். அதுமட்டுமல்ல பல முறை பிந்துவின் அக்கா ஞாபகம் வரும் போதெல்லாமல், அவரை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளாராம். இதுகுறித்து பிந்து கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் அவர் மீது வரதட்சணை கொடுமை, கொலை முயற்சி, கொலைவெறி தாக்குதல் உள்பட பல்வேறு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர்.