திருமணம் செய்து கொள்ள யாரும் பெண் தராததால் வயதான பெண்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்துவந்த  சைக்கோ கொலையாளி அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

வேலூர் மாவட்டம், சோளிங்கர் அடுத்த தாளிக்கால் கிராமத்தில் தெய்வானை இறந்துள்ளார். காந்தாம்மாள் என்பவரும் கல்லால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். அதற்கு முன் சகுந்தலா என்பவரும் கல்லால் தாக்கி கொல்லப்பட்டார். லட்சுமி என்பவர் கல்லால்  தாக்கப்பட்டு படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அதேபோல சித்தூர் மாவட்டம் நகரி ஆர்.வி.கே.புரத்தில் ரத்தினம்மாள், நகரி அருகில் பாலசமுத்திரம் அப்பல்ராஜி கண்டிகை  கிராமத்தில் வெள்ளையம்மாள் ஆகியோரும் கொலை செய்யப்பட்டனர். 

திருவள்ளூர் மாவட்டம் பாலாபுரம் பகுதியில் இளம்பெண் பிரமிளா என்பவர் கல்லால்  தாக்கப்பட்டு உயிர் தப்பினார். இந்த சம்பவங்கள் குறித்து சோளிங்கர், பாணாவரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் சித்தூர் போலீசார்  வழக்குப்பதிந்து கொலையாளியை தேடி வந்தனர். 

இந்நிலையில் இக்கொலை வழக்குகளில் தொடர்புடைய ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த சைக்கோ முனுசாமியை கடந்த மாதம் 22ம் தேதி ஆந்திர போலீசார் கைது செய்து சித்தூர் சிறையில் அடைத்தனர். 

இந்த சைகோ முனுசாமி கடந்த 2007ல் ராணிப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் வெட்டி கொலை செய்து நகை, பணத்தை  கொள்ளையடித்த வழக்கிலும், வாலாஜாவில் குழந்தையை கொன்று செல்போன் பறித்த வழக்கிலும் சிறை சென்றுள்ளது  குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தாளிக்கால் மூதாட்டி கொலை வழக்கில் முனுசாமியை காவலில் எடுத்து விசாரித்தனர். சைக்கோ அளித்த வாக்குமூலத்தில், 1990ல் தொடங்கி 2001 வரை திருட்டு சம்பவங்களில் மட்டும் ஈடுபட்டுள்ளான். பின்னர், 2007ல் ராணிப்பேட்டையில் ஒரு பெண்ணை  கத்தியால் வெட்டி கொலை செய்து பணம், நகைகளை பறித்து சென்றுள்ளான். தொடர்ந்து அதே ஆண்டில் வாலாஜாவில் ஒரு குழந்தையை கொலை  செய்து செல்போனை பறித்து சென்றுள்ளான். 

இதையடுத்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான். அப்போதுதான் சிறையில் இருந்த ஒருவர் இவனுக்கு, ‘தலையில் கல்லைப்போட்டு  கொலை செய்தால் யாரும் கண்டுபிடிக்க முடியாது’ ஐடியா கொடுத்ததால். அதன்படியே 2017ல் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் பெண்களை கல்லால் தாக்கி  கொலை செய்துள்ளான்.

திருடுவது, கொலை செய்ததால் யாரும் இவனுக்கு திருமணம் செய்ய பெண் கொடுக்கவில்லை. இதனால்  பெண்கள் மீது வெறுப்பில் இருந்த முனுசாமி சைக்கோவாக மாறியுள்ளான். ஆனாலும், பெண்களிடம் உல்லாசம் அனுபவித்தால் எய்ட்ஸ் வருமோ என்ற  அச்சத்தால், தனியாக இருக்கும் மூதாட்டிகளை நோட்டமிட்டு நிர்வாணப்படுத்தி தலையில் கல்லை போட்டு, அவர்களை கொலை செய்துள்ளான்.   இதுவரை இவன் 6 பேரை கொலை செய்துள்ளான்.