Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணையும் எதிர்க்கட்சித் தலைவர்கள்… மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டம்….

Protest against NEET.. chennai chepauk...on 24th august
Protest against NEET.. chennai chepauk...on 24th august
Author
First Published Aug 22, 2017, 10:44 PM IST


நீட்” மோசடியால் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி, சமூக நீதியை சீர்குலைத்த மத்திய - மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்து

சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுநாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக அனைத்துக்கட்சித் தலைவர்களும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு வலுக்கட்டாயமாக ஒரு “நீட்”நுழைவுத் தேர்வை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் திட்டம் போட்டு திணித்து, கிராமப்புற மற்றும் நகர்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை சீர்குலைத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Protest against NEET.. chennai chepauk...on 24th august

நீட்  நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்” என்று தமிழக சட்டமன்றத்தில் 1.2.2017 அன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அனுப்பாமல் பூட்டி வைத்துக் கொண்டு சர்வாதிகார மனப்பான்மையோடு செயல்பட்டு தமிழகத்தில் “நீட்” தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கிறது  என குறிப்பிட்டுள்ளனர்.

பாஜக  அரசு, மத்திய - மாநில உறவுகளையும், கூட்டாட்சி தத்துவத்தையுமே “கேலிப் பொருள்” ஆக்கிட முனைந்து செயல்பட்டு வருகிறது.

மாநிலங்களின் கல்வி அதிகாரத்தைப் பறித்துக் கொள்ளும் பா.ஜ.க.வின் இந்த ஆணவப் போக்கிற்கு, மாநிலத்தில் உள்ள அதிமுக அரசு ஓங்கி குரல் கொடுக்காமல், பணிந்து துணை போகிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.

மாநில பாடதிட்டத்தில் படித்த 98 சதவீத மாணவர்கள் மற்றும் மருத்துவ முதுநிலைப்படிப்பில் சேர விரும்பும் அரசு, மருத்துவர்களின் நலனை காற்றில் பறக்க விட்டு மத்திய - மாநில அரசுகள் உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கை நடத்தியிருப்பதும், வாதிட்டிருப்பதும் வருத்தமளிக்கிறது.

Protest against NEET.. chennai chepauk...on 24th august

நீட்  தேர்வை திணித்து தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கும், சமூக நீதிக் கொள்கைக்கும் பேராபத்தை உருவாக்கி, மாநில பாடதிட்டத்தில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்த துரோகத்திற்கு சம பங்குதாரர்களாக, இருக்கும் மத்திய - மாநில அரசுகளை கண்டித்து  நாளை மறுநாள்  சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள்பங்குபெறும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” காலை 10 மணி அளவில் நடைபெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்..

Protest against NEET.. chennai chepauk...on 24th august 

இந்த போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்இ தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்  சு. திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர்  ஜி. ராமகிருஷ்ணன்             இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிள் ஆர். முத்தரசன்,    இந்திய யூனியன் முஸ்லீம் லீக்       காதர் மொகிதீன்     விடுதலைட்ச சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,   மனிதநேய மக்கள் கட்சிதலைவர், ஜவாகிருல்லாஹ் ஆகியோர் பங்கேற்கின்னர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios