protest against big boss show

கலாரச்சார சீரழிவு நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தகூடாது என கூறி இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆங்கில தொலைகாட்சியில் இருந்து தழுவி ஹிந்தியில் ஒளிப்பரப்பாகி தற்போது தமிழுக்கு வந்திருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக் பாஸ் குடும்பத்தில் நடிகர் நடிகைகள் என 15 பேர் உள்ளனர். இதில் வரும் நடிகைகள் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து வந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

மேலும் அருவறுக்க தக்க வார்த்தைகளையும் உபயோகப்படுத்தி வருகின்றனர். இதனால் மக்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு காட்சிகள் அரங்கேறுகின்றன.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் 15 பேர்களில் பாஜக கலைபிரிவு தலைவர் பதவியில் இருக்கும்காய்திரி ரகுராமும் ஒருவர்.

இந்நிலையில், கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் ஒளிபரப்ப பட்டுவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் எனவும், காயத்ரி ரகுராம் பாஜக பதவியில் இருந்து விலக வேண்டுமெனவும் தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் நுங்கம்பாக்கத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கமல்ஹாசனுக்கு எதிராகவும், விஜய் டிவிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் இந்நிகழ்ச்சியை தடை செய்யவில்லை என்றால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.