அமேசான்.காம் எனும் பல்பொருள் விற்பனை செய்யும் ஆன்லைன் நிறுவனத்திற்கு அதிக வருமானம் தரும் இந்திய நாட்டை அவர்களை விட யாரும் கேவலப்படுத்தியிருக்க முடியாது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த மாதத்தில் அமேசான் நிறுவனம் தயாரித்த கால் மிதியடிகள்,செருப்புகள், உள்ளாடைகள், ஆகிய அனைத்திலும் இடம்பெற்ற சின்னம் எது தெரியுமா?

இந்திய தேசிய கொடிதான்...!!!

இந்தியாவின் தேசப்பிதா என நாம் அனைவரும் போற்றி வணங்கும் மகாத்மா காந்தியின் முகத்தை ஒரு செருப்பின் ஒரு பக்கத்திலும் இன்னொரு செருப்பின் இன்னொரு பக்கத்திலும் அச்சடித்து விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதை பார்த்த இந்தியர் ஒருவர் இந்த அவலங்களை ஆதாரத்தோடு வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு ட்விட்டர் மூலம் கொண்டு சென்றார்.

உடனே பொங்கி எழுந்த சுஷ்மா ஸ்வராஜ் அமேசான் நிறுவன அதிகாரிகள் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டுமென்றால் இந்த படங்களை உடனடியாக நீக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

சுஷ்மாவின் எச்சரிக்கைக்கு பணிந்து அமேசான் நிறுவனமும் தேசிய கொடியை அவமதிக்கும் படங்களை நீக்குவதாக தெரிவது விட்டது.

இருப்பினும் இந்திய அரசு சார்பில் அமேசான் நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை கந்தன்சாவடி , பெருங்குடியில் உள்ள அமேசான் அலுவலகம், தி.நகர் ஹபீபுல்லா சாலை அலுவலகங்களின் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனமான அமேசான் தேசப்பிதாவான காந்தியை காலில் போட்டு மிதித்திருப்பதோடு நமது தேசத்தின் கௌரவத்தையும் மிதித்துள்ளார்கள்.

இதனை எதிர்த்து வரும் வெள்ளிக்கிழமை காலை அமேசான் நிறுவனத்தின் அலுவலகங்களை முற்றுகையிடப்போவதாக வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்