Asianet News TamilAsianet News Tamil

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தமிழகத்தில் தடை..! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் அந்த இயக்கத்தை தடை செய்ததற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

Promulgation of ordinance banning PFI system in Tamil Nadu
Author
First Published Sep 29, 2022, 8:51 AM IST

5 ஆண்டிற்கு பிஎப்ஐ தடை
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்களை மத்திய அரசு கூறியது.  இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22 ஆம் தேதி வாரம் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 8 மாநிலங்களில் 110 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு மீண்டும் வட மாநிலங்களில் சோதனை நடத்தியது. இதனையடுத்து நேற்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் பிஎப்ஐ உள்ளிட்ட அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தது.

துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் பயிற்சி அளிக்கும் ஆர்எஸ்எஸ், சங்பரிவார்..? தடை விதிக்காது ஏன்? டிஎன்டிஜே கேள்வி

Promulgation of ordinance banning PFI system in Tamil Nadu

தமிழகத்திலும் தடை விதிப்பு

மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் அந்த இயக்கத்தை தடை செய்ததற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (மத்திய சட்டம் 37 இன் 1967)-இந்திய அரசாங்கத்தால் சட்டத்தின் பிரிவு 3(1) இன் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை (PFI) சட்டவிரோத சங்கமாக அறிவித்து- அதிகாரங்களை  அரசு-மற்றும் ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை ஆணையர்களுக்கு மாநில அரசு அதிகாரங்களை மறுபகிர்வு செய்து-ஆணைகள்-வெளியிடப்பட்டது

Promulgation of ordinance banning PFI system in Tamil Nadu

அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

 மத்திய உள்துறை அமைச்சகம் PFI மற்றும் அதன் துணை அமைப்புகளைத் தடை செய்த பிறகு,  PFI மற்றும் அதன் பிற அமைப்புகளை 7 & 8 பிரிவுகளின் கீழ் 'சட்டவிரோதம்' என தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும்தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

PFIக்கு தடை எதிர்பார்த்த ஒன்று தான்...! - ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங்தள் அமைப்பிற்கு தடை எப்போது..? திருமாவளவன்

 

Follow Us:
Download App:
  • android
  • ios