தென்காசியில் 2 வாரங்களுக்கு 144 தடை உத்தரவு.. இன்று முதல் அமல்.. காரணம் என்ன தெரியுமா..?
தென்காசி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை முதல் அடுத்த இரு வாரங்களுக்கு 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தென்காசி மாவட்டம் பரச்சேரி கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் 251 ஆவது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதே போல் செப்டம்பர் 1 ஆம் தேதி நெற்கட்டுசேவல் கிராமத்தில் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்படவுள்ளது.
மேலும் படிக்க:வேலியே பயிரை மேய்ந்தது போல்!! கொள்ளை வழக்கில் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு.. பாய்ந்த நடவடிக்கை..
தென்காசி தவிர பிற மாவட்டங்களிலிருந்து பல்வேறு அமைப்பினர் மற்றும் ஏராளமான மக்கள், இரு தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த வருகை புரிவர். இதனால் இந்நிகழ்ச்சிகளை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் கூடுவதால், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க, ஆகஸ்ட் 19 ஆம் தேதி காலை 6 மணி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க:இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த அதிமுக நிர்வாகி...! ஓபிஎஸ்யை திடீரென சந்தித்து ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு
இந்நிலையி நாளை நடைபெறவுள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் வீரவணக்க நிகழ்ச்சியையொட்டி, தென்காசி பகுதியில் இன்று காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.