வேலியே பயிரை மேய்ந்தது போல்!! கொள்ளை வழக்கில் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு.. பாய்ந்த நடவடிக்கை..
அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவத்தில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்த நிலையில், தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் வீட்டிலிருந்து 3.5 கிலோ தங்கள் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 13 ஆம் தேதி சென்னை அரும்பாக்கத்திலுள்ள ஃபெடரல் வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 11 தனிபடைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கொள்ளை சம்பவம் நடந்து 72 மணி நேரத்தில் கொள்ளைப் போன 31.7 கிலோ தங்க நகைகளும் மீட்கப்பட்டன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் மேலாளராக பணியாற்றிய முக்கிய குற்றவாளி முருகன், சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமரன், சூர்யா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க:சந்தையில் மின்சாரம் வாங்க தமிழகத்திற்கு தடை..! மின் தடை ஏற்பட வாய்ப்பு..? அதிர்ச்சி அளிக்கும் ராமதாஸ்
இந்நிலையில் இந்த கொள்ளைக்கு சம்பவத்திற்கு மூளையாக இருந்து திட்டம் போட்ட முக்கிய குற்றவாளி முருகனிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பமாக , அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜூக்கு தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் படிக்க:எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது- இபிஎஸ்
மேலும் அவரது வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 3.5 கிலோ தங்க நகை மீட்கப்பட்டன. வங்கி கொள்ளையில் போலீசாருக்கும் தொடர்பு உள்ளதாக என்பது குறித்து விசாரணை நடத்த தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது காவல் ஆய்வாளர் அமல்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.