prohibited from publishing pictures of students

கடந்த 12ம் தேதி பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடவில்லை. மாறாக கிரேடு முறை என புதிய திட்டத்தை பள்ளிக் கல்வி துறை அறிமுகம் செய்துள்ளது.

இதை தொடர்ந்து அதிக மதிப்பெண் எடுத்து முதல் 3 இடம் பிடித்தவர்களின் புகைப்படங்கள் வெளியிடவும் தடை விதித்ககப்பட்டது. இதையொட்டி நாளை மறுநாள் 10ம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவு வெளியாக உள்ளது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் ரேங்க் திட்டம் நீக்கப்பட்டு, கிரேடு முறை கொண்டு வரப்படுகிறது.

இதில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் புகைப்படங்களை வெளியிடவோ, விளம்பரங்களுக்கோ பயன்படுத்த கூடாது என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

தனியார் பள்ளிகள், மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவர்கள் மற்றும் பள்ளியில் முதல் இடம் பிடித்த மாணவர்களின் புகைப்படங்களையும் அவர்களது மதிப்பெண்களையும் விளம்பரத்துக்காக பயன்படுத்துகின்றன. 

இந்த ஆண்டு முதல், ரேங்க்ங் முறையை தமிழக அரசு மாற்றி அமைத்து, கிரேடு முறையை கொண்டு வந்துள்ளது. இதையொட்டி தற்போது, தனியார் பள்ளிகளுக்கு கட்டுப்பாடுளை விதித்துள்ளது.

இதுதொடர்பாக, மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

மாணவர்களின் நலன் கருதி அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் தனியார் பள்ளிகள் செயல்படக்கூடாது. ஒரு சில மாணவர்களின் புகைப்படம் அடங்கிய பதாகைகள், நாளிதழ்களின் விளம்பரங்களைத் தவிர்த்திட வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.