professor approaches students to give 5 kiss for 1 mark

1 மார்க்குக்கு 5 முத்தம்...! வெளிவந்த பல்கலைகழக விவகாரம்...!

அருப்புக்கோட்டை நிர்மலா தேவி போன்றே கோவையிலும் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக பேராசிரியர் பிலிப், தன்னிடம் படித்த மாணவிகளிடம் ஒரு பேராம் பேசி உள்ளார் அதன்படி, ஒரு மதிப்பெண்ணிற்கு 5 முத்தம் தர வேண்டுமாம்

இதனால் மன உடைந்த அந்த மாணவி தற்கொலை முயற்சி மேற்கொள்ள, பின்னர் எப்படியோ அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வழியாக குணமானார்

பின்னர் தன்னுடைய படிப்பை அதே கல்லூரியில் மேற்கொள்ள முடியாமல் சிறிது காலம் வீட்டிலியே இருந்த அந்த மாணவிக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். பிறகு அவருடைய வாழ்க்கை சுமூகமாக நடந்து வருகிறதாம்....

இது தொடர்பாக பேராசிரியர் 15 சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்...இந்நிலையில், அரசு அதிகாரியாக இருந்த தன் மனைவி துணையோடு ஜாமீனில் வெளிவந்து மீண்டும் அதே பல்கலைக்கழகத்தில் வேளைக்கு திரும்பி உள்ளார் பேராசிரியர்

பிலிப் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பல்கலைக்கழகம் சார்பில் நான்கு பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.அதில் மூன்று பேர் அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்

மற்றொருவர் அவினாசி லிங்கம் பல்கலை கழகத்தின் பேராசிரியை என்பது குறிப்பிடத்தக்கது

விசாரணையின் முதற் கட்டத்திலேயே, அந்த பேராசிரியை, "உங்கள் மீதாம் இப்படி ஒரு அபாண்டம் ..? என வாய் பிளக்க,விசாரணை குழுவின் அறிக்கை எப்படி இருக்கும் என இதிலிருந்தே அறிந்துக் கொண்ட விசாரணை குழுவில் உள்ள ஒரு பேராசிரியர் விலகி விட்டார்.

விசாரணை அறிக்கை ..?

கடைசியில் விசாரணை அறிக்கையில், பேராசிரியர் விளையாட்டாக பேசி உள்ளதை, அந்த மாணவி தவறுதலாக புரிந்துள்ளார் என அறிக்கை தாக்கல் செய்தனர்.

கடந்த 6 ஆண்டுகளாகவே, அந்த பேராசிரியர் இதே வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஒரு துறையின் டைரக்டராக உள்ளார்

இதே பல்கலைக்கழகத்தில், இன்னொரு பேராசிரியர் களப்பணிக்கு செல்ல வேண்டும் என தனது வாகனத்தில் மாணவிகளை ஏற்றிக்கொண்டு வழி நெடுகிலும் ப்ரேக் போட்டுக்கொண்டே செல்வாராம்.. தற்போது ஓய்வு பெற்று இருந்தாலும் அவரது ப்ரேக் பணி இன்னும் ஓயவில்லையாம்...

இன்னும் பல்கலை கழகங்களில் நடந்து வரும் இது போன்ற லீலைகளை தொடர்ந்து அடுத்தடுத்த பதிவில் காணலாம்.