ராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேட்டில் உள்ள தனியார் பள்ளியின் ஆசிரியை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகப்பிரியா. இவர்  அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். 

இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த மோகன்ராஜா என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணமானது. 

இந்நிலையில், இன்று அதிகாலையில் சண்முகப்பிரியா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டின் அருகே சடலமாக கிடந்தார். 

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சண்முகப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கழுத்தில் கயிறு இறுக்கி கொலை செய்து விட்டு கழுத்தை அறுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் சண்முகப்பிரியாவின் கணவர் மோகன்ராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.