Milk Price: மக்களுக்கு அடுத்த ஷாக்! பால் விலை மீண்டும் கிடுகிடு... அரசு தலையிட முகவர் சங்கம் கோரிக்கை

தமிழ்நாட்டில், தனியார் பால் விற்பனை விலை மீண்டும் உயர்கிறது. ஒரு லிட்டர் 80 ரூபாயை தொட்டுள்ளதாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது. இதில் தலையிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. 

private milk and butter milk sales price hiked

Milk and butter milk sales price hiked | இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பால் கொள்முதல் மற்றும் மூலப் பொருட்கள் விலை உயர்வு எனக்கூறி, ஒவ்வொரு முறையும் பால், தயிர் விற்பனை விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்துகின்றன.  கடந்த டிசம்பரில் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.  2,  நடப்பாண்டு பிப்ரவரியில் லிட்டருக்கு ரூ. 2; தயிர் விற்பனை விலை கிலோவிற்கு ரூ. 5  வரை ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தின.

ஹட்சன் நிறுவனம் நாளை (14.03.2025) முதல், ஆரோக்யா பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு ரூ. 4, தயிருக்கு கிலோவுக்கு ரூ. 3 வரை உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கியுள்ளது.  இதன் மூலம் பொதுமக்கள் மற்றும்  வணிக பயன்பாட்டிற்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் நிறைகொழுப்பு பாலின் விற்பனை விலை லிட்டர் ரூ. 80 வரை தொட்டிருக்கிறது.

தனியார் பாலில் கலப்படம் – ஆதாரத்தை வெளியிட்டார் ராஜேந்திர பாலாஜி

ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தும்  ஹட்சன் நிறுவனத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

ஏனெனில் உணவகங்கள், தேனீர் கடைகள் மற்றும் தனியார் அலுவலக கேண்டீன்களில் தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயரும். இதனால் மாதாந்திர ஊதியம் பெறும் பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என பொதுமக்கள் பாதிக்கப்படுவர். 

ஹட்சன் நிறுவனத்தின் இந்த தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வானது பிற தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விற்பனை விலை  உயர்வுக்கும் வழி வகுக்கும்.

ஹட்சன் நிறுவனத்தின் தன்னிச்சையான  விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு அதனை தடுத்து நிறுத்துவதோடு, தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்கு சிறப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காலையிலேயே பொதுமக்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி! பால் விலை மீண்டும் உயர்வு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios