திருவண்ணாமலை அருகே தனியார் காப்பகத்தில் 9 ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவிகள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் திண்டிவனம் சாலையில் நாச்சிப்பட்டு கிராமத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 47 சிறுமிகள் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தை லூபன்குமார் (வயது 65), அவரது மனைவி மெர்சிராணி (55), அதே பகுதியை சேர்ந்த மணவாளன் (60) ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். 

இந்நிலையில் அந்த காப்பகத்தில் கலெக்டர் கந்தசாமி கடந்த தீடீர் ஆய்வு நடத்தினார். அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் உடனே அங்கிருந்த மாணவிளை பெரும்பாகத்தில் உள்ள காப்பகத்துக்கு மாற்ற உத்தரவிட்டார். பின்னர் அவரது குறைகள் பாலியல் ரீதியான தொந்தரவு குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து காப்பாகத்தை நிர்வகித்து வந்த 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பின்னர் காப்பாகத்துக்கு சீல் வைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். கடந்த 9 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை  சந்தித்து வந்ததாக கதறிய படி கூறியுள்ளனர். அவர்களை சொல்வதை கேட்கவில்லை என்பதால் பள்ளிக்கு செல்லவிடாமல் செய்தனர். இந்த காப்பாகத்தில் குறிப்பிட்ட 3 மாணவிகளுக்கு மட்டும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் இருந்து வந்துள்ளது. இவர்களை கேட்க உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் இல்லாததால் அவர்களை கொடுமைப்படுத்தியுள்ளனர்.