prisoner suicide in prison
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் துரை. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கொலை வழக்கில் போலீசார் கைது செய்து, செங்கல்பட்டு சிறைச்சாலையில் அடைத்தனர்.
சிறை அடைக்கப்பட்டு இருந்த துரை, கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். சரிவர சாப்பிடாமல் இருந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், நேற்று இரவு அனைத்து கைதிகளும், சாப்பிட்டு தங்களது அறையில் தூங்கினர். இன்று வால வழக்கம் எழுந்து தங்களது பணிகளை செய்தனர். ஆனால், துரை நீண்ட நேரமாக வரவில்லை.
இதனால், சந்தேகமடைந்த சிறை காவலர்கள், துரை தங்கி இருந்த சிறை அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் தூக்கிட்டு சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சிறைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறை அதிகாரிகள் டார்ச்சரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர். சிறை அறையில் கைதி தூக்கிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
