திருவள்ளூர்

புழல் சிறைக் கைதிக்கும், சிறைக் காவலருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். 

thiruvallur க்கான பட முடிவு

 

போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நைஜீரிய நாட்டை சேர்ந்த நிக்கோலஸ். இவரை நேற்று முன்தினம் காலை திருப்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டு மீண்டும் நள்ளிரவில் புழல் சிறைக்குக் கொண்டுச் சென்றனர்.

அப்போது சிறைக் காவலர் பிரபாகரன், நிக்கோலஸை அவரது அறைக்குள் செல்ல வற்புறுத்தி உள்ளார். இதற்கு நிக்கோலஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், பிரபாகரனுக்கும், நிக்கோலஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

fight க்கான பட முடிவு

இதில் பிரபாகரனை நிக்கோலஸும், நிக்கோலஸை பிராபகரனும் ஒருவரையொருவர் சரமாரியாக அடித்து கொண்டனர். இதனால் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதனையடுத்து சண்டை நடப்பதை பார்த்து ஓடிவந்த சிறை அதிகாரிகள் இருவரையும் விலக்கிவிட்டனர். பின்னர், காயமடைந்த இருவரையும் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர். 

investigation க்கான பட முடிவு

கைதிக்கும், காவலருக்கும் இடையே நடந்த இந்த சண்டை குறித்து புழல் காவல் ஆய்வாளர் நடராஜ் வழக்குப் பதிந்தார். மேலும், இருவருக்குள்ளும் சண்டை ஏற்படும் அளவுக்கு அப்படி என்னதான் நடந்தது? என்று ஆய்வாளர் நடராஜ் விசாரித்து வருகிறார்.