தமிழகத்தில் மழை பொய்த்துவிட்டது. கடந்த ஆண்டு மழை அறவே இல்லாமல் போனதால், விவசாயம் முற்றிலும் பாதித்தது. விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர் என தினமும் செய்திகள் வெளியாகிறது.

வரலாறு காணாத வறட்சியால் மக்கள் குடிநீருக்கு அல்லாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி

“வறட்சியை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட்டு வருவதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு ஊரிலும் வறட்சி குறித்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,

நீராதாரம் உள்ள இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், வறட்சி பாதித்த பகுதிகளுக்கு ரூ.154 கோடி நிவாரணம் அறிவித்துள்ளதாகவும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.