நாளை 9 மணி முதல் 4 மணி வரை மின்வெட்டு ..! சென்னையின் எந்தெந்த பகுதியில் தெரியுமா..? 

சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்றும், குறிப்பிட்ட சில பகுதியில் பராமரிப்பு பணிக்காக இவ்வாறு செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி தண்டையார்பேட்டை ,அம்பத்தூர் சிட்கோ குன்றத்தூர், கெருகம்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாளை மின்வெட்டு செய்யப்பட உள்ளது

தண்டையார்பேட்டை பகுதியில், நார்த் டெர்மினல்ஸ் சாலை,எஸ்.என் ஷெட்டி ரோடு, மார்க்கெட் தெரு 1 முதல் 7 ஆவது வரை, ஹார்பரின் ஒரு பகுதி, ஆவூர் முத்தையா தெரு, நம்மையா தெரு,வெங்கடேஷ் அலி தெரு உள்ளிட்ட இடங்களில் மின்வெட்டு செய்யப்பட உள்ளது.

அம்பத்தூர் பகுதியில், கோரமண்டல் டவுன்,பட்ரவாக்கம் ,கண்ணன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், இதேபோன்று குன்றத்தூர் மெய்ன் ரோடு, சத்யநாராயணபுரம், ராஜலக்ஷ்மி நகர், ஷண்முகா நகர், மாங்காடு ரோடு உள்ளிட்ட இடங்களிலும், கெருகம்பாக்கத்தில் பூமாதேவி நகர்,ரங்கா நகர், லட்சுமி நகர், முருகன் நகர், சிந்து தெரு, சரஸ்வதி தெரு உள்ளிட்ட இடங்களிலும், பூந்தமல்லியில், அபிராமி நகர், காடுவெட்டி, பை பாஸ் ரோடு, திருமால் நகர்,குமரன் சாவடி, கரையான் சாவடி, மாறன் நகர்,கந்தசாமி நகர், கோரிமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.