சென்னையில் நாளை (19.12.2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், “பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

அதன்படி குக்ஸ் ரோடு பகுதி: குளக்கரை மெயின் தெரு, நேரு ஜோதி நகர் மெயின் தெரு, புதுவாழைமா நகர், கிருஷ்ணதாஸ் ரோடு, பூங்கா தெரு, சாஸ்திரி நகர், ஏகாங்கிபுரம் மெயின் தெரு, சேமாத்தம்மன் காலனி 1-6வது தெரு மற்றும் மெயின் தெரு, டீக்காகுளம், ஸ்டாரன்ஸ் ரோடு, ஓட்டேரி ஒரு பகுதி, ஸ்டாரன்ஸ் 1-5வது சந்து, குக்ஸ் சாலை, ஹைதர் கார்டன் 1-3வது தெரு மற்றும் மெயின் தெரு, ஈடன் கார்டன் தெரு, சோமசுந்தர நகர், பழைய வாழைமா நகர், கே.எச்.சாலை, சுப்பராயன் 1-5வது தெரு மற்றும் மெயின் தெரு, சின்னபாபு தெரு, ஒத்தவாடை தெரு, பராக்கா 1, 2வது தெரு மற்றும் மெயின் தெரு, வருமான வரி மற்றும் பிரியதர்ஷினி குடியிருப்பு, சி.ஆர்.கார்டன் தெரு, டோபிகானா தெரு, அருணாச்சலம் தெரு, வெங்கடேசபக்தன் தெரு, சின்னதம்பி தெரு, படவட்டம்மன் கோயில் தெரு, செங்கற் சூளை தெரு, காமராஜ் தெரு, திரு.வி.க.தெரு, எஸ்.எஸ்.புரம், திடீர் நகர், யேமி தெரு, புது மாணிக்கம் தெரு, வெங்கட ரத்தினம் தெரு, செல்லப்ப தெரு, நாரயண முதலி தெரு, வள்ளுவன் தெரு, சுப்பராயன் மெயின் மற்றும் 4, 5வது தெரு, வருமான வரி குடியிருப்பு, பராக்கா ரோடு, நல்லய்யா நாயுடு தெரு, சின்னபாபு தெரு, பாஷ்யம் ரெட்டி 1வது & 2வது தெரு,  செல்வப் பெருமாள் தெரு, சந்தியப்பன் தெரு.

தண்டையார்பேட்டை பகுதியில் சத்தியமூர்த்தி நகர், வி பி நகர், ஜெ ஜெ நகர், டி கே பி நகர், மணலி விரைவு ரோடு, ராமசாமி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், காமராஜர் நகர், மணலி விரைவு ரோடு, எச் டி சர்வீஸ் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.