power cut
மின் கட்டணம் செலுத்தாத தமிழக அரசு ? இருளில் மூழ்கிய வட சென்னை…
சென்னைக்கு மின்சாரம் வழங்கி வரும் வட சென்னை அனல் மின்நிலையத்துக்கு மின் கட்டணம் கட்டாமல் தமிழக அரசு பாக்கி வைத்துள்ளதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், இதனால் நேற்று இரவு முழுவதும் சென்னை இருளில் மூழ்கியது.
வடசென்னை மற்றும் அண்ணாநகர்,வில்லிவாக்கம் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு 9 மணி முதல் மின் விநியோகம் தடை பட்டுள்ளது.

இதையடுத்து நள்ளிரவில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து மின் வாரிய அலுவலங்களிலும் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் தங்கமணி , மணலி- மயிலாப்பூர் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த பழுதை நீக்கும் முயற்சியில் 200 மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
ஒவ்வொரு பகுதியாக பழுது நீக்கப்பட்டவுடன் மின்சாரம் வழங்கப்படும் என்றும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தங்கமணி தெரிவித்தார்.
ஆனால் சென்னைக்கு மின்சாரம் வழங்கி வரும் வட சென்னை அனல் மின்நிலையத்துக்கு மின் கட்டணம் செலுத்தாமல் தமிழக அரசு பாக்கி வைத்துள்ளதால் இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
