கேடிகளுக்கு கோடிகளில் கடன் தள்ளுபடி செய்துவிட்டு, கல்விக் கடன் கட்ட மறுத்த மாணவர்களின் புகைப்படத்தை ஒட்டியது போன்ற பல்வேறு நடைமுறைகளை கண்டித்து SBI வங்கிக்கு மலர் கொத்து கொடுக்கும் போராட்டம் நடைபெறவுள்ளது.
இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க கடன் தர SBI வங்கி மறுக்கிறது. மாணவர்கள் மற்றும் விவசாயிகாள் வாங்கிய கடனை கேட்டும், அடித்தும் மன உலைச்சலுக்கு ஆளாக்குகிறது SBI வங்கி.
கல்விக் கடன் வாங்கிய மாணவர் லெனின் கொலைக்கு காரணமான SBI வங்கி, வனங்களை அழித்த ஈஷா யோக மையத்திற்கு மக்கள் வரிப்பணத்தை அள்ளி அள்ளி வழங்கியது SBI வங்கி.
பரம் ஏழையான விஜய மல்லையா உள்பட 63 தொழில் அதிபர்களின் கடனான 1201 கோடி ரூபாயை ஒரே அடியாக தள்ளுபடி செய்த SBI வங்கி.
கேடிகளுக்கு கோடிகளில் கடன் தள்ளுபடி செய்துவிட்டு, கல்விக்காக கடன் கட்ட மறுத்த மாணவர்களின் புகைப்படத்தை அறிவிப்புப் பலகையில் ஒட்டியது SBI வங்கி.
இவ்வளவு நல்ல காரியங்காளையும் மக்களின் நலன், முன்னேற்றம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அருமையாக பாணியாற்றிய SBI வங்கியை கண்டித்து மலர் கொத்து கொடுக்கும் போராட்டம் 18.11.2016, காலை 11 மணிக்கு கோவை இரயில் நிலையம் அருகில் உள்ள SBI மண்டல வங்கி அலுவலகம் முன்பு நடைபெறுகிறது” என்று சமூக நீதிக்கட்சியை சேர்ந்த ந.பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்தார்.
