Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் தபால் வாக்கு பதிவு தொடங்கியது.. யாரெல்லாம் வாக்கு பதிவு செய்யலாம்.?எப்படி வாக்கு பதிவு செய்யலாம்?

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது மூத்தோருக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது

Postal voting for the elderly and differently-abled has started on the occasion of the parliamentary elections KAK
Author
First Published Apr 4, 2024, 10:10 AM IST | Last Updated Apr 4, 2024, 10:10 AM IST

நாடாளுமன்ற தேர்தல்  7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களும் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் வயது மூத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவை இன்று முதல் தமிழகத்தில் தொடங்கி உள்ளது. அந்த வகையில், 85வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளடம் இருந்து தபால் வாக்குகள் பெறும் பணி தொடங்கியது. ஈரோடு தொகுதியில் 3ஆயிரத்து 54பேர் விண்ணப்பம் செய்த நிலையில் 3ஆயிரத்து ஒரு பேர் தகுதி செய்யப்பட்டு தபால் வாக்குகள் பெறும் பணி தொடங்கியது., இதில் 85வயதிற்கு உட்பட்ட 2201பேரும் 800மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெறும் பணி தொடங்கியது .இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெற உள்ளது.

Postal voting for the elderly and differently-abled has started on the occasion of the parliamentary elections KAK
அதே நேரத்தில் சென்னை,காஞ்சீபுரம்  மாவட்டங்களில்  தபால்  ஓட்டு போடும்  பணி  திங்கட்கிழமை  தொடங்குகிறது.முதியோர்  ஊனமுற்றவர்கள்  வீடுகளுக்கு  சென்று  தபால்  வாக்குகள்  சேகரிக்கிறார்கள். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னையில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோருக்கு தபால் வழியாக ஓட்டளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தை பெறுவதற்கு வசதியாக, அவர்களின் வீடுகளுக்கே சென்று, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12டி வழங்கியுள்ளனர்

சென்னையில், 39,01,167 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 11,369 பேர் மாற்றுத்திறனாளிகள்; 85 வயதுக்கு மேற்பட்டோர் 63,751 பேர். மொத்தம், 75,120 வாக்காளர்கள் தபால் ஓட்டு அளிக்க உள்ளனர்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களான (Absentees Voters) 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட படிவம் 120 -ன் படி வீட்டிலிருந்தப்படியே வாக்களிக்க 1039 மூத்த குடிமக்கள் மற்றும் 612 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 1651 நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Postal voting for the elderly and differently-abled has started on the occasion of the parliamentary elections KAK

 வீடுகளுக்கே சென்று வாக்குகள் பெற ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 14 நடமாடும் குழுக்கள் (Mobile Team) அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நடமாடும் குழுவிலும் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர். ஒரு உதவி வாக்குச்சாவடி அலுவலர், ஒரு நுண்பார்வையாளர். ஒரு காவலர் மற்றும் ஒரு புகைப்பட கலைஞர் (Videographer) ஆகியோர் இருப்பர். வாக்குச் சாவடிக்கு வரஇயலாத வாக்காளர்களின் விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு எந்த தேதியில் எந்த நேரத்தில் அவர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற தகவலை வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மூலமாக வாக்காளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு அதனடிப்படையில் திங்கட்கிழமை சம்மந்தப்பட்ட வாக்காளரின் வீடுகளுக்கு சென்று  இரகசிய வாக்குப்பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

Postal voting for the elderly and differently-abled has started on the occasion of the parliamentary elections KAK

மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் வாக்களிக்க ஏதுவாக படிவம் 12 மற்றும் படிவம் 12A ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதர மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் பணியாளர்களுக்கு அஞ்சல் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க வசதி மையம் (Facilitation Centre) ஏற்படுத்தப்பட உள்ளன. இதர மாவட்டங்களில் பணிபுரிய உள்ள காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தும் வகையில் தனியாக தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வசதி மையம் (Facitation Centre) ஏற்படுத்தப்பட உள்ளன

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios