பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடிமகன்கள்  டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 475 கோடி மதிப்பிலான மது வகைகளை வாங்கிச் சென்றுள்ளனர்.  

தமிழகம் முழுவதும் 4,500 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில் சாதாரண நாட்களில் ரூ.75 கோடி முதல் ரூ.85 கோடி வரையிலும், விடுமுறை தினங்களில் ரூ.90 கோடி வரையிலும் மது விற்பனை நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த விற்பனை தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விழா காலங்களில் கீர்ரென உயரும்.

பொங்கலை முன்னிட்டு, 14ம் தேதியும் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டன. இதனால் இந்தாண்டு ரூ.600 கோடிக்கு மேல் மது விற்பனையாகும் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கடந்த 12ம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை 475 கோடி ரூபாய் அளவில் மது விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் அதற்கு முந்தைய நாட்களிலேயே குடிமகன்கள் அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கி இருப்பில் வைத்துக்கொண்டனர். இதுவும் கடந்த இரண்டு நாட்களில் விற்பனை அதிகரிக்க ஒரு காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.