காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில், பொங்கலுக்கு சொந்த ஊருக்கு வந்த இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசாணிமங்கள் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (24). இவர் கேரளாவில் பணியாற்றி வந்தார். பொங்கல் விழாவைக் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார் விஜய்.

நண்பர்கள் பார்த்துவிட்டு வருகிறேன் என்று வீட்டில் தெரிவித்துவிட்டு, வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். அதன்பிறகு, விஜய் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார் என்ற தகவல் மட்டுமே வீட்டிற்கு வந்தது.

உடனே அலறி அடித்துக் கொண்டு. விஜயின் பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தன் மகனைப் பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து காவலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்தவர்கள், விஜயின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

விஜயை கொலை செய்ததற்கு முன் விரோதம் காரணமா என காவலாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.