125 டெசிபலுக்கும் மே‌ல் ஒலி ஒழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாாியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓலி மாசு மற்றும் புகையில்லாத தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற விதிமுறைகளை கடைபிடிக்காமல் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளை வாங்கக் கூடாது என பொது மக்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை வெடிக்க‌க் கூடாது என்றும், விபத்துகள் ஏற்படாமல் தீபாவளியை கொண்டாடுவது குறித்து போதிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.