குவியும் வெள்ள நிவாரண நிதி.! அரசியல் தலைவர்கள், தனியார் நிறுவனங்கள் முதலமைச்சரிடம் காசோலை வழங்கினர்

சென்னை வெள்ளபாதிப்பையடுத்து நிவாரணப்பணிகளை மேற்கொள்ள அரசியல் தலைவர்கள், தனியார் நிறுவனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேரிடர் நிவாரண நிதியை வழங்கினர். 

Political leaders and private founders offered financial assistance to the Chief Minister for the flood relief work KAK

வெள்ள பாதிப்பு- பேரிடர் நிவாரண நிதி

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் புரட்டி போட்ட நிலையில், நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி உதவி அளிக்கும் படி முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதில் முதல் ஆளாக தனது ஒரு மாத ஊதியத்தையையும் வழங்கினார். இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட சட்ட மன்ற உறுப்பினர்களும் தங்களது ஊதியத்தை வழங்கினர்.

இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அரசியல் தலைவர்கள், தனியார் நிறுவனங்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில்,  மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக மதிமுக சார்பில் 10 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான  காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழங்கினார்.

Political leaders and private founders offered financial assistance to the Chief Minister for the flood relief work KAK
வைகோ, கி.வீரமணி நிதி உதவி

திராவிடர் கழகம் சார்பில் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 10 லட்ச ரூபாயை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முதல்வரிடம் தலைமை செயலகத்தில் வழங்கினார். சன் குழுமத்தின் சார்பாக 5 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கலாநிதி மாறன் வழங்கினார். சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் சாந்தி துரைசாமி, துரைசாமி ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை அளித்தனர்.

Political leaders and private founders offered financial assistance to the Chief Minister for the flood relief work KAK

சன் குழுமம் 5 கோடி நிதி உதவி

சன்மார் நிறுவன குழுமத்தின் சார்பாக ஒரு கோடி ரூபாய் வழங்குவதற்கான காசோலையை வழங்கினர். இதே போல தமிழ்நாடு இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் சார்பாக ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கினர்.  லயன் டேட்ஸ் நிறுவனத்தினர் சார்பாக 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். இதே போல பல்வேறு நிறுவனத்தினர் முதலமைச்சரை சந்தித்து பேரிடர் நிதி அளித்தனர். 

இதையும் படியுங்கள்

யாருக்கெல்லாம் ரூ.6000 நிவாரணத் தொகை கிடைக்கும்.? ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் கிடைக்குமா.? வெளியான தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios