வடமாநில தொழிலாளர்கள் பற்றி போலி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி.. விரைந்த தனிப்படை - கைது செய்யப்படுகிறாரா.?
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற போலியான செய்தியை வெளியிட்ட பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவை தமிழ்நாடு போலீஸ் கைது செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவின. மேலும், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்த விவகாரம் பீகார் மாநில சட்டப்பேரவையில் நேற்று எதிரொலித்தது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்தப் பிரச்னையை நேரில் ஆராய தமிழ்நாட்டிற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை அனுப்பி வைப்பதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அரசு உடனடி நடடிக்கை எடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதே போல தவறான தகவல்களை பரப்பினால் 7 ஆண்டுகள் வரை சிறை எனவும், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தும், வடமாநில தொழிலாளர்கள் நலனுக்காக ஒரு சிறப்பு பிரிவை உருவாக்கியும் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க..Explained: தமிழகத்தில் வட இந்தியர்களை குறி வைத்து தாக்கும் தமிழர்கள்.. உண்மையா.? நடப்பது என்ன.? ஓர் அலசல்
வேறு மாநிலத்தில் நடந்த பழைய வீடியோ என்றும் தமிழகத்தில் வெளி மாநிலத்தவர்கள் பாதுகாப்பாகவே பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இது போன்ற தவறான செய்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். தற்போது இந்த தவறான செய்தியை பரப்பிய 4 பேர் பேரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க..பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலைவாய்ப்பு.. 281 காலியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி.?
இந்நிலையில் போலியான செய்தியை வெளியிட்ட பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவை கைது செய்ய தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 7 பேர் கொண்ட போலீஸ் குழு டெல்லி செல்கிறது. டிஎஸ்பி தலைமையில் எஸ்பிஎல் குழு இன்று டெல்லிக்கு புறப்பட்டது. ஐதராபாத்தில் இருவரிடையே நடந்த மோதலை தமிழ்நாட்டில் நடந்த மோதலாக சித்தரித்து பிரசாந்த் உமாராவ் வதந்தி பரப்பியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க..AIADMK: அகம்பாவம்.. ஆணவம்.! அதிமுகவின் தோல்விக்கு துரோகி எடப்பாடி தான் காரணம் - கொந்தளிக்கும் ஓபிஎஸ்