Police team are suffered at dedapadi palanisamy Iftar party
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அதிமுக அம்மா அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தினகரன் ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் அதிமுக அம்மா அணி சார்பாக நடக்கும் இஃப்தார் விருந்தில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி வந்தார்.
அப்போது முதல்வர் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். திடீரென மழை பிடித்துக்கொண்டதால் போலீஸ் உயர் அதிகாரிகள் அவரவர் வாகனங்களில் சென்று அமர்ந்துவிட்டனர். உயர் அதிகாரிகளே ஓடிவிட்டதால் போலீசாரும் மழைக்காக ஓரம் ஒதுங்கிவிட்டனர். இதனால் முதலமைச்சர் எடப்பாடி வரும்போது ஒரு போலீசார் கூட பாதுகாப்புக்கு நிற்கவில்லை.
இதனால் அதிர்ந்து போன உயர் அதிகாரிகள் போலீசாரை ஏன் ரெயின் கோட்டு எடுத்து வரவில்லை என்று மைக்கில் சத்தம் போட , திடீரென்று டூட்டி போட்டால் எங்கிருந்து இதையெல்லாம் எடுத்து வர முடியும் என்று போலீசார் முனகியுள்ளனர்.
