Police sucide with his wife and publish a viedio in wattsapp before sucide

ஆயுதப்படை காவலர் மனைவியுடன் தற்கொலை… மாமனார்தான் காரணம் என சாவதற்கு முன் வீடியோவில் வாக்குமூலம்…

சென்னை ஆயுதப்படை காவலர் ஒருவர் தனது மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் இறப்பதற்கு முன்பு தனது மாமனார் மற்றும் சித்தப்பா குடும்பத்தினர் தான் தங்களது சாவுக்கு காரணம் என வாட்ஸ்அப்பில் வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எண்ணூரை அடுத்த எர்ணாவூரைச் சேர்ந்தவர் சவுந்திர பாண்டியன். ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்த இவருக்கும் அவரது மாமனாருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று காவலர் சவுந்திர பாண்டியன் தனது மனைவி சசிகலாவுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சவுந்தர பாண்டியன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது தற்கொலைக்கு யார் காரணம் என வீடியோவில் பதவி செய்து அதை வாட்ஸ் அப்பில் அனுப்பியிருக்கிறார்.

இதைப் பார்த்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரை தொடர்பு கொள்வதற்கு முன் சவுந்திர பாண்டியன் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தனது பதிவில் தனது மாமா ஆறுமுகம் அவரது மனைவி பிரேமா, சித்தப்பா கிருஷ்ணன் அவரது மனைவி ரஞ்சிதம் ஆகியோர்தான் தங்களது தற்கொலைக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்றும், தனது தாயை பார்த்துக் கொள்ள முடியாமல் போனதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டும் இருக்கிறார்.

ஆயுதப்படை காவலரின் இந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.