- Home
- Tamil Nadu News
- இந்த ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படாது.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
இந்த ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படாது.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னை எழும்பூரில் இருந்து சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படாது. தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, அங்கு இருந்து புறப்படும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் இடம் மாற்றப்பட்டுள்ளது. பிப்ரவரி 4ம் தேதி முதல் ஏப்ரம் 6ம் தேதி வரை சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16865) இரவு 11 மணிக்கு எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி புறப்படும்.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ்
சென்னை-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வ.எண்: 20635) பிப்ரவரி 4ம் தேதி முதல் ஏப்ரம் 6ம் தேதி வரை இரவு 8.20 மணிக்கு எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும். சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16751) இரவு 9.05 மணிக்கு எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து ராமேஸ்வரத்துக்கு செல்லும்.
உழவன் எக்ஸ்பிரஸ்
இந்த உழவன் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பிப்ரவரி 3ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும். சென்னை எழும்பூர் செல்லாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை மும்பை CSMT சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்ள் 22158) பிப்ரவரி 4ம் தேதி முதல் ஏப்ரம் 6ம் தேதி வரை சென்னை எழும்பூருக்கு பதிலாக காலை 6.50 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு செல்லும்.
திருச்சி - அகமதாபாத் சிறப்பு ரயில்
மேலும் திருச்சி-அகமதாபாத் வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண்: 09419) பிப்ரவரி 8ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமைகளில்) மாற்றுப் பாதையில் அதாவது விழுப்புரம், வேலூர், ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
