Asianet News TamilAsianet News Tamil

அதிமுக பிரமுகரை வெளுத் தெடுத்த இன்ஸ்பெக்டர்... நிலைகுலைந்து கதறி அழுத மாஜி மா.து.செ!

மணப்பாறை அருகே கருங்குளம் என்ற ஊரை சேர்ந்த முன்னாள் ஒன்றிய சேர்மன். எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணைச்செயலாளராக  இருந்த பழனிசாமியை போலிஸ் இன்ஸ்பெக்டர் போலிஸ் ஸ்டேஷனில் வைத்து பொளந்து கட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

Police scored ADMK chair man
Author
Manapparai, First Published Sep 6, 2018, 5:32 PM IST

மணப்பாறை அருகே கருங்குளம் என்ற ஊரை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் அதிமுககாரர். முன்னாள் ஒன்றிய சேர்மன். எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணைச்செயலாளராக இருக்கிறார். இதைவிட முக்கியம், 4 முறை மாவட்ட கவுன்சிலராக இருந்தவர். அதனால் அந்த பகுதியில் இவருக்கு  செல்வாக்கு அதிகம்.

இந்நிலையில் சொந்த பிரச்சனை குறித்து பேச மணப்பாறை காவல் நிலையத்துக்கு இரவு வந்தார். அப்போது ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கென்னடி, நான் இப்போது டிஎஸ்பி-யை பாக்க அவசரமா கிளம்பிட்டு இருக்கேன். போய்ட்டு வந்து உங்ககிட்ட பேசறேன் என்றார்.  இன்ஸ்பெக்டர் இப்படி சொன்னதும் பழனிச்சாமிக்கு கோபமும், ஆத்திரமும் வந்தது. 

நான் யார் தெரியும் இல்ல? நான் ஆளும்கட்சிகாரன், மாவட்ட செயலாளராக இருந்தவன், என்கிட்ட என்ன பிரச்சனைன்னு கூட கேட்காம வெளியே கிளம்பி போனால் என்ன அர்த்தம்? என்று பழனிச்சாமி சத்தம்போட்டார்.

நடவடிக்கை எடுக்க மாட்டியா என ஆவேசமும் பட்டார்.  அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார்… அவசரமா வெளியே போகிறேன்… உடனே வந்துடறேன்  கம்ப்ளைண்ட் மட்டும் கொடுங்க என்று இன்ஸ்பெக்டர் கென்னடி  சொன்னதும் பழனிசாமி ஆவேசத்துக்கு சென்றுவிட்டார். 

என்னயா… நான் சொல்லிட்டே இருக்கேன்… நடவடிக்கை எடுக்க மாட்டியா? என்று ஒருமையில் கத்தினார்.  இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் கென்னடியும், என் ஸ்டேஷன்ல வந்து என்னையே மரியாதை இல்லாம பேசுறீயா? என்று கூறி பழனிச்சாமியை சரமாரியாக அடித்து உதைத்தார். ஸ்டேனில் வைத்து தாக்குதல் நடத்தியதால் பழனிசாமி நிலை குலைந்து போனார். என்னசெய்வதென்று தெரியாமல் கதறி அழுதார். 

இதில் அவரது சட்டையும் தாறுமாறாக கிழிந்து தொங்கியது. கொஞ்ச நேரத்தில் முகமெல்லாம் வீங்கிபோய்விட்டது.  உடனே கிழிக்கப்பட்ட சட்டையுடன் ஸ்டேஷனுக்கு வெளியே ஓடிவந்தார்.  

அதோடு பழனிசாமியுடன் இருந்த ஆதரவாளர்களும் இந்த தகவலை வையம்பட்டி, மருங்காபுரி போன்ற ஊருக்குள் சொல்லவும், நூற்றுக்கணக்கானோர் ஸ்டேஷனுக்கு நடு இரவில் வந்துவிட்டனர். 

பழனிசாமியின் ஆதரவாளர்கள் இன்ஸ்பெக்டர் கென்னடியை கைது செய்ய வேண்டும் கோஷம் போட்டனர். 2 மணி நேரம்  சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை டிஎஸ்பி ஆசைத்தம்பி வந்துவிட்டார். சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். பழனிசாமியோ அசைந்து கொடுக்கவில்லை.  

இன்ஸ்பெக்டர் கென்னடி மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்னபிறகு, 2 மணி நேரம் கழித்து ஒருவழியாக பழனிசாமி தர்ணாவை வாபஸ் பெற்றார். இதற்கிடையே   ரத்தினவேலிடம் புகார் சொன்னார்கள்  இந்த  விவகாரம் ஐஜி வரதராஜிடம் போனது. 

ஐஜியும், பழனிசாமியை அடித்தது உண்மைதான் என்பதை உளவுத்துறை மூலம் உறுதிபடுத்திக் கொண்டார். பிறகு என்ன? இன்ஸ் கென்னடி இப்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios