- Home
- Tamil Nadu News
- திருச்சி
- திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட சில நொடிகளில்! அலறிய 180 பயணிகள்! நடந்தது என்ன?
திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட சில நொடிகளில்! அலறிய 180 பயணிகள்! நடந்தது என்ன?
திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக நிறுத்தப்பட்டது.

குஜராத் மாநிலம் அகதாபாத்தில் இருந்து ஜூன் 12-ம் தேதி பிரிட்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஓடு பாதையில் இருந்து மேலெழும்பிய சில நொடிகளிலேயே விமானம் கீழே விழுந்ததில், விமானம் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 240 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதனால் அடுத்தடுத்து விமான விபத்து, திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம் செய்யும் சம்பவங்களும் நிகழ்ந்து வருவதால் ஒரு வித பீதியுடனே பயணிகள் விமானத்தில் பயணிக்கின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு 180 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானி அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து விமானத்தை ஓடுபாதையிலேயே விமானி நிறுத்தினார்.
இதனையடுத்து கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்திற்குள்ளேயே பயணிகள் காத்திருந்தனர். இருப்பினும் தொடர்ந்து கோளாறு சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டுள்ளனர். பகல் 12 மணிக்கு மாற்று விமானம் மூலம் அவர்கள் அனைவரும் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.