ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த வடமாநில இளைஞரை, ரயில்வே போலீசார் ஒருவர் சாமர்த்தியமாக காப்பாற்றிய சம்பவம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தாதர் விரைவு ரயில் புறப்பட தயாராக இருந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு தாதர் விரைவு ரயில் புறப்பட்டது. புறப்பட் சிறிது நேரத்தில், வட மாநில வாலிபர் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றுள்ளார்.

முன்பதிவில்லாத பெட்டியில் அந்த இளைஞர் ஏற முயன்றபோது, தவறி விழுந்துள்ளார். ரயிலுக்கும், நடைமேடைக்கும் நடுவில் அவர் மாட்டிக் கொண்டார். 

ரயில் ஓடத் தொடங்கிய நிலையில், அந்த இளைஞரும் இழுத்துச் செல்லப்பட்டார். இதனைப் பார்த்த ரயில்வே போலீசார் ஒருவர் விரைவாக செயல்படு அந்த வாலிபரை வெளியே இழுத்தார். இதனால் எழும்பூர் ரயில் நிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

காப்பாற்றப்பட்ட இளைஞருக்கு எந்த வித சிறு காயமும் இல்லாமல் தப்பித்தார். இந்த காட்சி எழும்பூர் ரயில் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ வலைத்தளத்தில் பரவி வருகிறது.