police lathi charge stalin condemn

இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற அசம்பாவிதத்திற்கு முழு காரணம் இந்த அரசின் கையாலாகத்தனமும், உளவுத்துறை தோல்வியும் தான் என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்திர தடைவிதிக்கக் கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே கலவரமானது. 

மேலும் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நீண்ட நாட்களாக தொடர்ந்து ஸ்டர்லைட் போராட்டம் நடத்தி வருவதை அதிமுக அரசு கண்டு கொள்ளவும் இல்லை. சுமூக தீர்வு காணவும் இல்லை. வழக்கம் போல் மக்கள் போராட்டத்தை முடக்க நினைத்த அதிமுக அரசின் அலட்சியத்தாலலேயே இன்று மக்கள் பேரணி நடத்தி அது துப்பாக்கி சூடு வரை சென்றுள்ளது. 

இன்றைய பேரணி பற்றி முன்பே அறிந்த காவல்துறை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது. இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற அசம்பாவிதத்திற்கு முழு காரணம் இந்த அரசின் கையாலாகத்தனமும், உளவுத்துறை தோல்வியும் தான். இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஸ்டர்லைட் ஆலையை அரசு உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதே நேரத்தில் மக்களின் நலனுக்காக நடைபெறும் போராட்டங்கள் ஜனநாயக ரீதியிலும், அறவழியிலும் நடந்திடும் வகையில் எதிர்காலத்திலாவது இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறியுள்ளார்.