police head misbehave with women who coming to give complaints

திருநெல்வேலி 

திருநெல்வேலியில் புகார் கொடுக்க வரும் பெண்களுடன் காம விளையாட்டில் ஈடுபட்ட காவல் ஏட்டை மக்கள் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரத்தை சேர்ந்த காவல் ஏட்டு ஒருவர், அருகில் உள்ள குரும்பலாப்பேரியில் தனி வீடு எடுத்து தங்கி பணியாற்றி வருகிறார். இவருடைய குடும்பத்தினர் செங்கோட்டை பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காவல் நிலையத்திற்கு குடும்ப பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக வரும் சில பெண்களுக்கு இந்த காவல் ஏட்டு வலைவிரித்து, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

இந்த தகவல் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் பரவி பெரும் அதிருப்தியையும், காவலரின் இந்த இழி செயல் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனால், அவருடைய வீட்டு பகுதியில் கூட பெண்கள் நடமாடுவதை தவிர்த்து வந்தனர்.

நாளுக்கு நாள் அந்த காவல் ஏட்டுவின் காம விளையாட்டுகள் அதிகரித்து வந்ததால், மக்கள் தடுக்க திட்டமிட்டனர். காவல் ஏட்டு என்பதால், அவரை எளிதாக கண்டிக்க முடியாத நிலையில் தொடர்ந்து அவருடைய நடவடிக்கைகளை மக்கள் கண்காணித்தனர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் குடும்ப பிரச்சனை காரணமாக காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். அவருடைய செல்போன் எண்ணை வாங்கி கொண்ட ஏட்டு, வழக்கம்போல அடிக்கடி அந்த பெண்ணிடம் காதல் மொழி பேசி, தனது வலையில் வீழ்த்தி உள்ளார். 

சம்பவத்தன்று அந்த பெண்ணை தனது வீட்டுக்கு காவல் ஏட்டு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். இதனை கவனித்த மக்கள், அந்த பெண்ணுடன் காவல் ஏட்டை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.

அந்த வீட்டை 10–க்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்தனர். ஒருவர் சென்று வீட்டுக் கதவை தட்டினார். அப்போது, ‘யாருப்பா...’ என்ற உரத்த சத்தத்துடன் காவல் தோரணையில் கைலியை சரி செய்து இடுப்பில் கட்டியவாறு, கதவை மெதுவாக ஏட்டு திறந்தார். வெளியில் நின்று கொண்டிருந்த 10–க்கும் மேற்பட்டோர் அதிரடியாக ஏட்டை உள்ளே தள்ளிக் கொண்டு வீட்டுக்குள புகுந்தனர்.

அப்போது கட்டிலில் ஏட்டுடன் உல்லாசமாக இருந்த பெண் நிர்வாண கோலத்தில் இருந்தார். வீட்டுக்குள் பலர் வருவதை பார்த்த அந்த பெண் பதறி எழுந்துள்ளார். அவர் அருகில கிடந்த பாவாடையை மட்டும் உடம்பில் சுற்றிக் கொண்டு வீட்டிக்குள் ஒரு மூலையில் கதறி அழுதவாறு முடங்கி உள்ளார். 

ஏட்டையும், அந்த பெண்ணையும் சிலர் வீடியோ படம் பிடித்தனர். தப்ப முயற்சித்த இருவரையும் அவர்கள் வீட்டுக்குள் மடக்கி உட்கார வைத்தனர். இது தொடர்பாக பாவூர்சத்திரம் காவலாளார்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு வந்த காவலாளர்களிடம், இருவரையும் மக்கள் ஒப்படைத்தனர். அவர்களிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

காவல் ஏட்டுவின் இந்தச் சம்பவம் நெல்லை மாவட்ட காவலாளர்கள் மத்தியில் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.