கள்ளக்குறிச்சி வன்முறை; காவல்நிலையத்தை கொளுத்துவோம்..! வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய இளைஞரை தட்டி தூக்கிய போலீஸ்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்ட நிகழ்வில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையில், காவல்நிலையத்தை கொளுத்துவோம் என வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்யை பகிர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

Police have arrested people who spread rumors on WhatsApp regarding the death of Kallakuricha student

காவல்நிலையத்தை கொளுத்துவோம்

கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி என்கிற தனியார் பள்ளியில் படித்த 12 வகுப்பு மாணவி ஶ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.இவரது உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்றது. கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட பேருந்துகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாட்ஸ் அப்பில் தவறான தகவலை பரப்பி பொதுமக்களை போராட்டத்தை தூண்டியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தனியார் பள்ளி கலவரம் தொடர்பாகவும், வாட்ஸ் அப் குழுவில் 1500 இளைஞர்கள் இணைந்து காவல் நிலையத்தை கொளுத்துவோம் என வாய்ஸ் மெசேஜ்ஜை பகிரப்பட்டு வருவதாக புகார் கூறப்பட்டது.இதனையடுத்து திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த அருண்குமார் (22). என்பவரும், உடுமலைப்பேட்டை எஸ்.எஸ் காலனியில் வசிக்கும் வெங்கடேஷ் (20) என்ற  இளைஞரும் தங்கள் பகுதியை சேர்ந்த வெவ்வேறு வாட்ஸ் ஆப் குழுவில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளனர்.

பாக்கெட் சாராயம் மூலம் கள்ளக்குறிச்சி பள்ளிக்கு தீ வைக்கப்பட்டதா...? திடீரென வெளியான விடியோவால் பரபரப்பு

Police have arrested people who spread rumors on WhatsApp regarding the death of Kallakuricha student

கைது செய்த போலீசார்

அதில் சட்டவிரோதமாக 1500 இளைஞர்கள் இணைந்து காவல் நிலையத்தை கொளுத்துவோம் என்ற வாய்ஸ் மெசேஜ் பகிர்ந்துள்ளதாகவும், மேலும் மாணவி மரணம் தொடர்பாக உண்மைக்கு முரனான தகவலை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வாட்ஸ் அப்  குரூப்பின் அட்மின் கொடுத்த புகாரில் இளைஞர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்  அவர்கள் மீது கலகம் விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டது, பொது தளத்தில் ஆத்திரமூட்டும் வகையில் பதிவேற்றம் செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இதே போல கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக வாட்ஸ்அப் குழு அமைத்து வதந்திகளை பரப்பியதாக சென்னை திருவல்லிக்கேணியில்  4 மாணவர்களை பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.  விசாரணைக்கு பின்பு, அவர்களின் எதிர்கால நலன் கருதி பெற்றோரை வரவழைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்

மீண்டும் பரபரக்கும் குட்கா ஊழல் வழக்கு.. முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், ரமணாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சிபிஐ

அதிர்ச்சி!! இன்று ஒரே நாளில் 2,603 பேர் பலி.. 20,557 பேருக்கு கொரோனா.. இன்றைய பாதிப்பு நிலவரம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios