Asianet News TamilAsianet News Tamil

சாய் கிரிப்டோ கரன்சி நிறுவனத்தின் 100 கோடி மோசடி.! பாஜக ஓபிசி அணி செயலாளரை தட்டி தூக்கிய போலீஸ்- காரணம் என்ன.?

சாய் கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் பணம் மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் கார்த்தியேகயன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police have arrested a BJP state executive in a cryptocurrency scam case KAK
Author
First Published Oct 17, 2023, 1:41 PM IST

கிரிப்டோ கரன்சி மோசடி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள விவேகானந்த நகரைச் சேர்ந்தவர் எஸ்.அர்ஜூன் கார்த்திக். இவர்  கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகப் பொது மக்களிடம் கூறியுள்ளார். மேலும் கும்பகோணம் பேருந்து நிலையம் அருகில் சாய் கிரிப்டோ கரன்சி  நிறுவனத்தையும் நடத்தி  வந்துள்ளார்.

ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் என 18 மாதங்கள் தரப்படும் எனவும், இறுதியாக செலுத்திய முழு பணமும் கொடுக்கப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஒரு சில மாதங்கள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுத்தவர்கள், திடீரென பணம் கொடுப்பதை நிறுத்தியுள்ளனர். 

Police have arrested a BJP state executive in a cryptocurrency scam case KAK
 
பாஜக நிர்வாகி கைது

இந்தநிலையில் கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் பணத்தை செலுத்தி ஏமாந்து விட்டதாக திருவாரூர் மாவட்டம் பூதமங்கலத்தை சேர்ந்த ஷேக் அலாவுதீன் உள்ளிட்ட பலர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது ரூ.50 முதல் 100 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அர்ஜூன் கார்த்தி, இவாஞ்சலின் அபிலாதரஸ், நிறுவனத்தின் பார்ட்னரான ராஜா, இவரது மகன் செல்வக்குமார் ஆகியோரை கடந்த 13ம் தேதி போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து கிரிப்டோ கரன்சி நடத்தி வந்த அர்ஜூன் கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பாஜக நிர்வாகி கார்த்திகேயன் என்பவர் தன்னை மிரட்டி பல கோடி ரூபாய் அபகரித்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.  

Police have arrested a BJP state executive in a cryptocurrency scam case KAK

தீவிர விசாரணையில் போலீஸ்

கார்த்திகேயன்(42) பாஜக ஓபிசி அணி மாநில செயலாளராக உள்ளார். இவர் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாச்சியார்கோவில் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் ரவுடி பட்டியலில் கார்த்திகேயன் பெயர் உள்ளது. இதனையடுத்து கார்த்திகேயனை கைது செய்த போலீசார் கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய நபர்களை கைது செய்யாமல் இருக்க கார்த்திகேயன் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு வயது குழந்தை கடத்தல்.! அதிரடியாக இறங்கிய போலீஸ்-குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

Follow Us:
Download App:
  • android
  • ios