சசிகலா மற்றும் ஓபிஎஸ் இடையே நடைபெற்று வரும் அதிகாரச் சண்டையில் தமிழகத்தில் ஒரு அசாதரண சூழ்நிலை இருந்து வருகிறது.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து பிரச்சனை தொடங்கியது. தன்னை முதலமைச்சராக்க வேண்டும் என்று ஆளுநருக்கு சசிகலா கடிதம் எழுதியதோடு தனக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கடிதங்களையும் கவர்னரிடம் அளித்தார்.

மேலும் இப்பிரச்சனையில் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என சசிகலா, ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால் கவர்னர் தொடர்ந்து சசிகலாவை பதவியேற்க அழைக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் கடுப்பான சசிகலா, போயஸ் தோட்டத்தில் தொண்டர்களிட்ம் பேசும்போது ஓரளவிற்குதான் பொறுமை காக்க முடியும்.. அதற்கு மேல் செய்ய வேண்டியதை செய்வோம். என எச்சரித்தார்.

இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பரபரப்பான இந்த நிலையில் சென்னையில் அசம்பாவிதங்கள் நடைபெறும் சூழ்நிலை இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

பல்வேறு ஊர்களில் இருந்து ரௌடிகள் வரவழைக்கப்பட்டு சென்னையில் திருவல்லிக்கேனி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தகவல் அறிந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னையில் உள்ள அனைத்து லாட்ஜ் மற்றும் திருமண மண்டபங்களில் சோதனை நடத்தி அறிக்கை தருமாறு, கமிஷனர் ஜார்ஜிடம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனைடத் தொடர்ந்து சென்னையில் அனைத்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது பொது மக்களளிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.