திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான சரக்கு லாரிகள், திருச்சியிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சிக்கும் சென்றுகொண்டிருக்கின்றன. 

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் டோல்கேட்டுகளுக்கு சுங்கவரியாகவே ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும் நிலையில், காவல்துறையையும் கவனிக்க வேண்டிய அவலநிலை நிலவுகிறது.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் லாரி ஓட்டுநரிடம், ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர் லஞ்சம் கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. 

<iframe frameborder="0" width="480" height="270" src="//www.dailymotion.com/embed/video/x6g3mcw" allowfullscreen allow="autoplay"></iframe>